கம்யூனிசத்தின் கறுப்பு புத்தகம்(The Black Book of Communism)
இந்தக் கட்டுரை `Adam Shatz' ன் "The Guilty Party" என்ற கட்டுரையை அடியொட்டி எழுதப்பட்டது.
-ஆர். முத்துக்குமார்
1946-ல் ரஷ்யாவைச் சேர்ந்த பத்திரிக்கை நிருபரான இல்யா எஹ்ரன்பரக் மற்றும் நாவலாசிரியரான வாசிலி கிராஸ்மேன் என்பவரும் சேர்ந்து, `கறுப்புப் புத்தகம்' The Black Book)) என்ற ஒரு அறிக்கை நூலை வெளியிட்டனர். அதில் சோவியத் யூதர்களுக்கு எதிரான ஜெர்மன் பயங்கரவாதப் பிரசாரத்தை அம்பலப்படுத்தியிருந்தனர். ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் இந்தப் புத்தகம் வந்ததாகையால், அவருக்கு இந்தப் புத்தகம் பிடிக்கவில்லை. ஏனெனில் அந்நூலில் ஹிட்லரின் யூதப்படுகொலைப் பற்றி அதிகமாக இருந்ததோடு மட்டுமல்லாமல், சோவியத் ருஷ்யாவின் ரெட் ஆர்மி என்பது பாசிசத்தை அதன் யூத இனத்துவேஷத்திற்காக எதிர்க்கவில்லை என்பதாக, சோவியத் சர்வாதிகாரிக்கு ஒரு அடி கொடுத்திருந்தது. இது போன்ற தருணங்களில், ஸ்டாலின் தான் வழக்கமாகச் செய்வதையே செய்தார். அந்தப் புத்தகத்தை தடை செய்தார். ஸ்டாலின், ஆனாலும், இந்நூல் வழக்கம் போலவே ரகசியப் பண்பாடாக இயங்கிவந்த Samizdat'- இடம் நுழைந்தது.
இதற்கு அரை நூற்றாண்டிற்குப் பிறகு, ஒரு `புதிய கறுப்புப் புத்தகம்' வெளியானது. ஆனால் இம்முறை நாஜிகளின் அடக்கு முறை பற்றி அது பேசாமல், கம்யூனிசத்தின் பேரால் அடக்கி ஆண்டு, வாசிலி கிராஸ்மன் புத்தகத்தை தடைசெய்த ஒரு ஆட்சிப் போக்கைப் பற்றியதாக இருந்தது.`கம்யூனிசத்தின் கறுப்புப் புத்தகம்' The Black Book of Communism)) என்ற இந்த புதிய நூல், பிரெஞ்சு வரலாற்றியலாளர்களால் எழுதப்பட்டு, 1997- அக்டோபர் இறுதியில் வெளியானது.இந்த நூல், மூன்றாம் உலகத்தின் மேல் சிகப்பு கொடி பறக்க விட்ட சோஷலிச அரசாங்கத்தின் குற்றங்கள், பயங்கரங்கள் மற்றும் அடக்கு முறையைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பாகும்.நான்கு வருடங்களுக்கு முன் 1997 -ல் இந்நூல் பிரான்சில் வெளியிடப்பட்டபோது, - அதாவது அக்டோபர் புரட்சியின் 80-ம் நூற்றாண்டு விழாவின் போது - அது அறிமுகப்படுத்தப்பட்டபோது - மிகப்பெரும் சினத்தையும், கலகத்தையும் பற்ற வைத்தது. அப்படி அதில் என்னதான் கூறப்பட்டிருக்கிறது :நாஜிசம் செய்த படுகொலைகளை விட கம்யூனிசம் செய்த படுகொலைகள் அதிகம்' என்பதே அது. மிகவும் கலகபூர்வமானது
ஏனெனில் அந்த 858-பக்க புத்தகத்திற்கு ஆராய்ச்சி செய்து பங்களித்தவர்களுக்கே, தர்மசங்கடமான ஒரு சினம் எழுந்தது. ஹார்வர்டு வெளியீட்டின் அட்டையில் ஆறு பேரை பட்டியல் போட்டு இருக்கிறது, அதாவது அவர்கள் எல்லோரும், ஏதோ ஒரு `எதிர்கம்யூனிச முன்னணி' துவங்கி விட்டார்கள் என்பது போல் இருந்தது போன்ற ஒன்றை ஏற்படுத்தியது. ஆனால் இவர்கள், கம்யூனிசத்தின்பால் இருந்த மாயையிலிருந்து வெளிவந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இந்தத் தோற்றம், எப்போதும் போலவே, பொய்மையானதே, நமது நூற்றாண்டின் ரகசிய வரலாறு நமக்கு சொல்லிக் கொடுத்ததைப்போல்.இந்த நூல் வெளிவந்து சில வாரங்களுக்கு பிறகு, இந்த நூலில் சிறப்புப் பங்களிப்பை செய்த ரஷ்ய வரலாற்றாசிரியர் நிகோலஸ் வெர்த் மற்றும் சீன நிபுணரான ஜான் - லூயிஸ்-மர்கோலின் போன்றவர்கள் இந்நூலின் தொகுப்பாசிரியரான `ஸ்டீபன் கர்ட்டாய்'ஸை பல நேர்காணல்களிலும், கட்டுரைகளிலும் கடுமையாக எதிர்த்தனர்.
இந்த வரலாற்று நிபுணர்கள் ஸ்டீபன் கர்ட்டாய்ஸ் அந்த நூலின் அறிமுகத்தில் பன்னாட்டு கம்யூனிசத்தை "அமைதிக்கு எதிரான குற்றமாகவும், போர் குற்றங்கள் செய்ததாகவும், மனித சமூகத்திற்கு எதிராக குற்றங்களை இழைத்ததாகவும்" போன்று குற்றம் சாட்டப்பட்டதற்கு எதிராக தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும், கம்யூனிசத்தின் சக பயணிகளை `பொது விலை மாதர்கள்' என்பது போல் குறிப்பிட்டது, பங்களிப்பு செய்த நிபுணர்களுக்கே மிகுந்த சினத்தை கிளப்பியது. எல்லாவற்றையும் விட மோசமானதாக இவர்கள் சொல்வது என்னவெனில், ஸ்டீபன் தன் அறிமுகத்தை நூல் வெளியிடப்படுவதற்கு முன்னால் படிக்க அனுமதிக்கவில்லை என்பதே. அக்டோபர் 31-ல் வெர்த், மற்றும் மர்கோலின் `Lemonde' பத்திரிகையில் மேற்கோளாகக் காட்டியது வெளிவந்தது. அதாவது ஸ்டீபன் தன் அறிமுகத்தில் "கம்யூனிசத்தின் வரலாற்றுப் பாத்திரத்தை அழித்து, அதன் கீழ் நடந்த படுகொலைகளின் எண்ணிக்கையை ஊதிப்பெருக்குகிறார்" என ஸ்டீபனை தோலுரித்தார்கள்.இந்த நூலிற்கான அறிமுகம் முதலில், முன்னாள் கம்யூனிசவாதியும், பிரெஞ்சுப் புரட்சி வரலாற்றாசிரியர்களின் - கல்வியியல் முதல்வருமான பிரான்சுவா ஃப்யுரெட்டிடம் ஒப்படைக்கப்பட்டது, ஆனால் அவர் இறந்துவிடவே இந்தப் பொறுப்பு ஸ்டீபனின் தலையில் விழுந்தது. ஃப்யுரெட் ஏற்கனவே `கடந்து போகும் மாயைகள்' ((The Passing of an illusion)என்ற தன் புத்தகத்தில் கம்யூனிஸ்டுகளின் அநீதிகளையும், இவருக்கு அதனுடன் இருந்த உறவுகளையும் பற்றிய ஒரு ஆய்வை நிகழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஃடீபன் கார்ட்டியஸ் மிகவும் விஷத்தனமாக, லெனின், ஸ்டாலின், கேஸ்ட்ரோ' மற்றும் இன்னும் ஒரு டஜன் பேர்களை பெருவாரியான அநீதிகளை முழு முதல் அரசாங்கமாக மாற்றியவர்கள்" என கடும் தாக்குதல் தொடுக்கிறார்.மேலும் அவர் கூறியுள்ளார் "(கம்யூனிசமும், படுகொலைகளில் நாஜிசத்திற்கு சளைத்ததல்ல; நாஜிசம் 25 மில்லியன் பேர்களை கொன்று குவித்தது என்றால் கம்யூனிசம் 100 மில்லியம் பேர்களை கொன்றது' என்கிறார்.
அதாவது ஹன்னா அரெண்ட் கூறுவது போல் நாஜிஸத்தை விட' என்று கூற முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் நாஜிசம் போலவே கம்யூனிசமும் ஒரு `தீவிரமான தீமை' என்பது போல் ஸ்டீபன் குறிப்பிடுகிறார்.ஆனாலும் ஸ்டீபன் தனது விவாதங்களை, ஜெர்மன் திருத்தவ்வாத வரலாற்றியலரான எர்னஸ்ட் நோல்ட்டின் `குற்றங்களிலிருந்து விடுவிக்கின்ற' தன்மையுள்ள விவாதங்களிலிருந்து வேறுபடுத்திக் கொள்கிறார். எர்னஸ்ட் நோல்ட் ஸ்டாலினின் உக்ரேனிய குலாக்குகளுக்கு எதிரான நடவடிக்கையை `நிஜமான இனப்படுகொலை' என்பதாகக் குறிப்பிடுகிறார். ஆனால் இவர் போருக்குப் பிந்தைய காலக்கட்டங்களில் யூதர்படுகொலைகளை வறட்டுத்தனமாக கம்யூனிஸ்டுகள் ஊக்குவித்ததை எதிர்ப்பதில் அவ்வளவு கவனமாக வாதங்களை கையாளவில்லை.உண்மையில் யூதப்படுகொலைகள் பற்றி பிரெஞ்சு அறிவுஜீவிகளுக்கு 1980-ல் தான் தகவல்கள் கிடைக்கின்றன.
அதாவது ரால் ஹில்பர்க் என்பவரின் "ஐரோப்பிய யூதர்களின் படுகொலை" என்ற நூல் மொழிபெயர்க்கப்பட்ட பிறகே. அலெக்சாந்தர் ஸோல்ஷெனிசின் வெளிச்சம் போட்டுகாட்டிய் ரஷ்ய குலாக் அதிக கவனம் பெறப்படுகிறது.14 கட்டுரைகள் கொண்ட `கம்யூனிசத்தின் கறுப்புப்புத்தம்' என்ற நூலில், இரண்டு கட்டுரைகள், மிகவும் ஆழமாக விஷயங்களை வரலாற்றுத் தரவுகளுடன் ஆராய்ந்து எழுதப்பட்டிருக்கிறது என்பதைக் குறிப்பிட வேண்டும். வெர்த் என்ற கட்டுரையாசிரியரின் இந்த நூலில் உள்ள சிறுபுத்தகம் அளவுள்ள ரஷ்யா பற்றிய கட்டுரையும், மர்கோலின் என்பவரின் மாவோ காலத்திய கருத்தியல் ரத்த காவுகளைப் பற்றிய, கட்டுரையும் சிறப்பான கட்டுரைகள்.`கம்யூனிசத்தின் கறுப்புப் புத்தகம்' என்ற இந்தப் பெரிய நூலில் `மக்களுக்கு எதிராக அரசு' என்ற தலைப்பில் வரும் வெர்த்தின் கட்டுரையில், ரஷ்ய சிவில் யுத்தத்தின் முந்தைய வருடங்களில் `அரசு பயங்கரவாதம்' எவ்வாறு அரசாங்கத்தின் வழிமுறைகளாக இருந்து வந்திருக்கிறது என்பதையும், லெனினும், போல்ஷெவிக்குகளும் எவ்வாறு ஸ்டாலினி சக்திற்கு அடிப்படைகளை நிறுவினர், என்பதையும் தோலுரித்து அலசுகிறது.
தானியம் கொடுக்க மறுத்த போராளி விவசாயிகளின் மேல் பாய ராணுவப் படைகளை ஊக்குவித்தார் லெனின்.லெனின் தனது காம்ரேட் ஜினோவியெவ் என்பவற்கு கடிதம் எழுதுகையில் "பெரும்பயங்கரம் என்ற சக்தியை உபயோகிக்க வேண்டும்" என்கிறார். போல்ஷே விக்குகளுக்கு, உக்ரெய்னில் யூதப் படுகொலைகள் செய்த யூத துவேஷ வெள்ளை ரஷ்ய ராணுவத்தினரின் பகைமை இருந்த போதிலும், விவசாயிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை திறம்படவே செய்ய முடிந்தது. போல்ஷெவிக்குகள், தங்கள் படுகொலைகளை, மிகவும் திட்டவட்டமாகவும், பறந்து பட்ட அளவிலும், ஒழுங்கு முறைக்குட்பட்டு செய்தனர் என்று வாதிடுகிறார் கட்டுரையாசிரியரான வெர்த்.1919-20-கிராமப்படுகொலைகளுக்கு இம்முறை பங்களிப்பை செய்தது சோவியத் லட்சியவாதம், இது இவர்களை, வர்க்கத்தின் பேரால் படுகொலை செய்வதை அனுமதித்தது, அதாவது பழைய உலகம் அழிந்து புதியது பிறக்கும் போதான கஷ்டமே இது என கொலைகளை நியாயப்படுத்தியது.அப்போது வெளிவந்த ஒரு தினசரியில் : `நம் ஒழுக்கத்திற்கு முன் மாதிரி எதுவும் இல்லை, நம் மனிதம் பரமார்த்திகமானது, ஏனெனில் இது `புதிய லட்சியத்தில்' வேரூன்றியிருக்கிறது. நமக்கு எல்லாமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் நாமே மானுடத்தை அதன் சங்கிலிகளிலிருந்து விடுவிக்கிறோம்... ரத்தம்? அது தண்ணீர் போல் ஓடட்டும்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
வெர்த்தைப் பொறுத்தவரையும், சுதந்திரமான விவசாயிகளுக்கு எதிரான இத்தகைய பூசல்கள் - 1930 ல் அவர்களை அப்புறப்படுத்துவதற்கான தீர்மானங்களை திறந்து விட்டிருக்கிறது. குறிப்பாக ஸ்டாலின் ஆட்சியில் அவர் `பசி' யை புறவயமான நட்பமாக பிரயோகிக்கவைத்து, குலாக்குகளை பட்டினி போடுவதன் மூலம் வேளாண்மையை கூட்டுறவாக்கும் போக்கிற்கு வழிவகுத்தது.துரதிர்ஷ்டவசமாக `கம்யூனிசத்தின் கறுப்பு புத்தகம்' என்ற நூலில் வெர்த் மற்றும் மர்கோலின் போன்றவர்களின் பங்களிப்பு மட்டுமே ஆய்வு பூர்வமாகவும், தரவு பூர்வமாகவும், சிறப்பானதாக அமைந்திருக்கிறது. ஸ்டீபனின் கம்யூனிசத்திற்கெதிரான `வனசமாரி' அறிமுகத்துடன் இந்நூல் முடிந்துவிடுவதில்லை. ஸ்டாலின், மாவோ, பால்பாட்-அநீதிகளையும், குற்றங்களையும் நாம் மறுக்க முடியாது, ஆனாலும் இந்நூலில் காணப்படும் `லத்தீன் அமெரிக்காவில் கம்யூனிசம்' பற்றி மிகவும் ஒரு தலைப்பட்சமாகவே கையாளப்பட்டுள்ளது. இந்த தரவுகளை அமெரிக்க அரசாங்க அறிக்கைகளிலிருந்தே நாம் பெற முடியும் என்ற அளவிற்கு பலவீனமானதாக அமைந்திருக்கிறது. சாந்தினிஸ்டா நிகாரகுவாவின் போரில் மாண்டவர்களின் மொத்த எண்ணிக்கையும் நமக்கு தரப்பட்டுள்ளது.
ஆனால் இந்த மரணங்கள், அமெரிக்க நிதியுதவியுடன் நடந்த `காண்ட்ரா' இயக்கத்தினரால் நடந்ததேயாகும். கியூபா பற்றிய பாஸ்கல் ஃபோன்டேனின் கட்டுரையில், செகுவெராவை கொள்கைப் பிடிவாதமுள்ளவராகவும், சகிப்புத் தன்மை, பொறுமையற்றவராகவும், சித்தரிக்கப்படுகிறது. "... அவரிடம் கியூபாவின் மரபார்ந்த திறந்த மனப்பான்மையோ, கியூப உணர்வோ இருக்கவில்லை" சேகுவாரோ ஒரு அர்ஜென்டைனியர்" என்கிறார் பாஸ்கல். பாட்டிஸ்டாவின் ஆதிக்கவாத கியூபாவை, இனவாத அரசாகவும், அங்கு கறுப்பர்கள் இரண்டாம் தர குடிமகன்களாகவுமே அங்கீகரிக்கப்பட்டனர் என்றும், சொத்து சமமாக பகிரப்படவில்லை, போன்றவைகளை கட்டுரையாளர் பாஸ்கல் ஒப்புக் கொண்டாலும், செகுவேராவின் எதிர்ப்பு சமூக அநீதியால் விளையவில்லை, அவருடைய அமெரிக்க - எதிர்ப்பால், வெறுப்பால் உண்டானதே என்கிறார் பாஸ்கல். ஆனாலும் எங்குமே, செகுவேராவின் அமெரிக்க - எதிர்ப்பிற்கான நியாயம் இவர் கட்டுரையில் காணப்படவில்லை. உதாரணமாக கியூபாவின் உள்-நாட்டு அரசியலில் அமெரிக்கா தலையிட்டு, கவுத்தமாலாவின் ஜனநாயக சீர்திருத்தவாதியான ஜேக்கபோ ஆர்பென்ஸை தூக்கியெறிய திட்டம் போட்டு வெற்றி கண்டதைப் பற்றிய குறிப்பு இவரது கட்டுரையில் காணப்படவில்லை. ஆனாலும், கியூபா சிறைச்சாலைகள் பற்றிய முக்கியமான, மற்றும் மனதைப் பிழியும் தரவுகளை அளிக்கிறார் பாஸ்கல்.கியூபா கம்யூனிசம் மனித உரிமை மீறல்கள் செய்திருப்பினும், அங்கு மருத்துவம், கல்வியில் நிகழ்ந்த மாற்றம், லத்தீன் அமெரிக்க, ஆஃப்ரிக்க புரட்சியாளர்களைக் கவர்ந்தது என்றே சொல்ல வேண்டும்.`கம்யூனிசத்தின் கறுப்புப் புத்தகம்' என்ற நூலின் ஆசிரியர்கள், இந்த இயக்கம் ஓரளவுக்கு நாஜிசத்தையும், கறுப்பரின துவேஷத்தையும் களைந்தது என்பதற்கான இடம் கூட கொடுப்பதாகத் தெரியவில்லை. கம்யூனிசம் என்ற லட்சியவாதம் பல அழிவுகளை நடத்தியிருப்பினும், இதே லட்சிய வாதம், சில நாடுகளில் மனசாட்சி உள்ளவர்களை தட்டி எழுப்பியிருக்கிறது, பாசிசமோ, நாஜிசமோ இதைச் செய்ததாக என்றுமே கூறு முடியாது.இந்தப் புத்தகம் பிரான்சில் அறிவுஜீவிகளிடையே ஏற்படுத்திய பரபரப்பு அமெரிக்காவில் ஏற்படுத்தவில்லை. மிகப்பெரிய திட்டமாக எழுதப்படவேண்டிய ஒரு நூலை வெறும் `எண்ணிக்கை விளையாட்டாக' மாற்றிவிட்டதாகவே அமெரிக்க அறிவு ஜீவிகள் கருதுகின்றனர்.இந்தப் புத்தகம் பிரான்சு நாட்டு நாடாளுமன்றத்தையே கலக்கியது என்றுதான் கூற வேண்டும், நவம்பர் 12- அன்று மைக்கேல் ஹாய்சின் என்ற ஐக்கிய ஜனநாயக முன்னணியின் முக்கியப் பிரமுகர், சோஷலிசக் கட்சியின் பிரதம மந்திரியை அவரது கட்சியின் பிரெஞ்சு கம்யுனிஸ்டுகளுடனான கூட்டணியைப் பற்றி கேள்விக்கணைகளைத் தொடுத்திருக்கிறார், அதற்கு பதிலளித் சோஷலிசக் கட்சியின் பிரதம மந்திரி லயோனல் ஜோஸ்பின், ஸ்டாலின் ஆட்சியின் பயங்கரங்களை ஒப்புக் கொண்டு, பிரான்சைப் பொறுத்தவரையில், `இரண்டாம் உலகப்போர்' என்ற மாபெரும் வரலாற்று நிகழ்வின் காலக்கட்டத்தில் கம்யுனிஸ்டுகளே தேச பக்தியுடன் போராடினர், அதனால் எங்கள் கட்சியில் அவர்கள் இணைந்திருப்பது குறித்து தனக்குப் பெருமையே என்றார்.
ஆனால் ஏன் `கம்யூனிசத்தின் கறுப்புப் புத்தகம்'? `முதலாளியம் என்ற கறுப்புப் புத்தகம்' ஏன் இல்லை? முதலாளியம், என்ற ஒன்று ஆதிமுதலே இருந்து வருவதுதான், அது செய்யும் அநீதிகளின் ஒரு எதிர்வினை நோய்க்கூறு வடிவம்தான் கம்யூனிசமா? இந்தக் கேள்விக்கு விடைகாண முடியுமோ முடியாதோ. ஆனால் `கம்யூனிசத்தின் கறுப்புப் புத்தகம்' மிகச் சிறந்த வரலாற்று ஆவணநூல் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்